Sunday, September 16, 2012

மக்கள் பங்கேற்புடனான உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தி திட்டம் தயாரித்தல்




அறிமுகம்:
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் பொதுவாக ஒரு வருடத்திற்கோ அன்றி கூடிய வரை நான்கு வருடங்களுக்கோ தங்களது மன்றங்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னர் தயாரித்து வந்தன. இத்திட்டங்கள் தனியே அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களாலும், உறுப்பினர்களாலுமே தயாரிக்கப்பட்டதினால் பெரும்பாலும் திட்டங்கள் அவர்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையுமே பிரதிபலித்ததே தவிர அவை மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்க தவறிவிட்டன. அத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான கருத்திட்டங்கள் பல தொடர்ச்சித்தன்மை இன்றி தோல்வியில் முடிந்தன. இவற்றைப் போக்கி மக்களினினூடகவே அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவைகளுக்கூடாக சிறந்த மிக அவசியமான கருத்திட்டங்களை முன்னெடுக்குமுகமாக PURA NEGUMA  திட்டமானது கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நான்கு வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டமொன்றை மக்கள் பங்கேற்புடன் தயாரிக்க தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.

நோக்கம்:
ஓவ்வொரு உள்ளூராட்சி மன்ற பிரிவுகளிலும் செயற்படுத்தும் அனைத்து கருத்திட்டங்களும் அவர்களின் பிரச்சனைகளை தீர்hககூடியதாகவும், அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகவும் மாற்றுதல்
ஓவ்வொரு உள்ளூராட்சி மன்ற பிரிவுகளிலும் செயற்படுத்தும் அனைத்து கருத்திட்டங்களுக்கும் அவற்றின் தொடர்ச்சித்தன்மையையும், பராமரிப்பையும் மக்களாலேயே மேற்கொள்ள உறுதிசெய்தல்.

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டத்தின் தயாரிப்பு:
 இத் திட்ட தயாரிப்புக்கள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களே மேற் கொள்ளும் இதற்கான உதவிகளனைத்தையும் PMU  செய்யும் தயாரிப்புக்கு தேவையான பயிற்சிகள் , வசதிப்படுத்தல்களை ஆலோசனைகளை தகவல் வள முகாமைத்துவ நிவையம் (CIRM ) , கிழக்கு மாகாணம் வழங்கும். இவைகள் குறிப்பிட்டவாறு தயாரிக்கப்படுகின்றனவா என்பதை PURA NEGUMA PMU , அந்தந்த உள்ளூராட்சி மனறங்கள் கண்காணித்துக்கொள்ளும்.

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டத்தின் உள்ளடக்கம்:
இத் திட்டமானது நான்கு வருடத்திற்கென தயாரிக்கப்படும், இதில் முக்கியமாக கீழ் வரும் 5 விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் 
1. உள்ளூராட்சி மன்ற பின்னணி
2. உள்ளூராட்சி மன்ற பிரிவு தொடர்பான அடிப்படை தகவல்கள் 
3. உள்ளூராட்சி மன்றத்திற்குள் அடங்கும் கிராம சேவையாளர் பிரிவுகளில் மக்களால் எதிர் நோக்கப்படும் முக்கிய பிரச்சனைகளும் அவற்றிற்கான தேவைகளும் 

4. அடையாளப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களும் உத்தேச மதிப்பீடும் 

5. வருடாந்த நடைமுறைப்புடுத்தல் திட்டம்

இவற்றுக்கு மேலதிகமாக இணைப்புக்கள் காணப்படும்

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தி திட்டத்தயாரிப்பின் செயன் முறை:

1. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு வழங்குதல்
2. சபையின் அங்கீகாரத்தை பெறல்
3. கிராம சேவகர் பிரிவுகளில் திட்டமிடல் குழுக்களை உருவாக்குதல்
4. உள்ளூராட்சி மன்ற திட்டமிடல் குழுக்களை உருவாக்குதல்
5. தேவையான பயிற்சிகளை வழங்குதலும் முன் ஆயத்தமும்
6. கிராம சேவகர் பிரிவுகள்தோறும் மக்களின் பிரச்சனைகளையும் அவற்றிற்கான காரணங்களையும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகளையும் தொடர்பான தகவலையும் பெற கள ஆய்வுகளை ஒழுங்கு செய்தல்
7. கிராம சேவகர் பிரிவுகளுக்கான அபிவிருத்தி திட்டம் ஒன்றை தயாரித்தல்
8. அவ் கிராம அபிவிருத்தி திட்டங்களை மக்களைக் கொண்டு வலிதாக்கல்
9. குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றத்திற்குள் உள்ளடங்கும் கிராம அபிவிருத்தி திட்டங்களுக்கூடாக, அவைகளின் அடிப்படையில் அவ்  உள்ளூராட்சி மன்றத்திற்கான நான்கு வருட அபிவிருத்தி திட்டத்தினை உருவாக்குதல்
10. கிராம சேவகர் பிரிவு பிரதிநிதிகள் , உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்; ஊடாக இவ் அபிவிருத்தி திட்டத்தை வலிதாக்கல்.