கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கும் புறநெகும திட்டத்தின் மீளாய்வு கலந்துரையாடல்
வ.ராஜ்குமார்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கும் புறநெகும (நெல்சிப்) திட்டத்தின் மாகாண மட்டத்திலான கலந்துரையாடல் நவம்பர் 19ம் திகதி திருகோணமலை வரோதயநகரில் உள்ள உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் புறநெகும திட்டத்தின் தேசிய பணிப்பாளர் திரு.அஸ்ரப் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.எம்.உதயகுமார் மற்றும் தகவல் கல்வி தொடர்பாடல் நிபுணர் திரு.ஏ.எஸ் கௌரிபாலன் பிரதி திட்டப்பணிப்பாளர் திரு.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் திருமலை மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களின் பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர்கள் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளுராட்சி சபைகள் முன்னெடுக்கும் அபிவித்திப் பணிகள் துரிதமாக இடம்பெறுவதற்கான ஆலோசனைகளும் தீர்வுகளும் நிபுணர்களிடம் இருந்து பெறும் பொருட்டு இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
No comments:
Post a Comment